sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஏப் 30, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 30, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவிசார் பதற்றத்தால் மந்தம்


இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் லேசான இறக்கத்துடன் நிறைவு செய்தன. நேற்று சந்தையில் வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வரத்து நீடிப்பதால், சற்று நேரத்தில் சந்தை மீண்டது.

எனினும், பாகிஸ்தான் உடன் எல்லையில் நிலவும் பதற்றம், பஜாஜ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் பெரியளவில் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், நாள் முழுதும் சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது.

நிப்டி குறியீட்டில் அதிகபட்சமாக ரியல் எஸ்டேட் துறை குறியீடு 1.91 சதவீதம் உயர்வையும், பொதுத்துறை வங்கி குறியீடு 2.23 சதவீதம் சரிவையும் கண்டன.

சரிவுக்கு காரணங்கள்

1. இந்தியா -- பாகிஸ்தான் எல்லையில் நீடிக்கும் பதற்றம்

2. நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் மந்தம்

3. ஆசிய சந்தைகளில் காணப்படும் கலவையான போக்கு

உலக சந்தைகள்


செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 125, ஹாங்காங்கின் ஹேங்செங் இறக்கத்துடனும், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் குறியீடு உயர்வுடனும் வர்த்தகமாகின. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டில் பரவிய செய்தியால், பாகிஸ்தான் பங்கு சந்தையின் கராச்சி 100 குறியீடு, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

உயர்வு கண்ட பங்குகள் (நிப்டி)

 எச்.டி.எப்.சி., லைப்: 4%

 மாருதி: 3%

 எஸ்.பி.ஐ., லைப்: 2%

சரிவை கண்ட பங்குகள் (நிப்டி)

 பஜாஜ் பின்சர்வ்: 6%

 பஜாஜ் பைனான்ஸ்: 5%

 டிரென்ட்: 5%

மஹாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, இன்று இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 51 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.92 சதவீதம் குறைந்து, 63.66 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா உயர்ந்து, 84.54 ரூபாயாக இருந்தது.






      Dinamalar
      Follow us