தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பெரிதும் கவனத்தை ஈர்த்த பங்கு பரிவர்த்தனைகள்

 பெரிதும் கவனத்தை ஈர்த்த பங்கு பரிவர்த்தனைகள்

 பெரிதும் கவனத்தை ஈர்த்த பங்கு பரிவர்த்தனைகள்


ADDED : ஜூன் 26, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தையின் 'பல்க்' மற்றும் 'பிளாக் டீல்' தரவுகளின்படி, 'மாமாஎர்த்' மற்றும் 'மேதாந்தா' குழும பங்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. மாமாஎர்த் பிராண்டின் தாய் நிறுவனமான 'ஹோனாசா கன்ஸ்யூமரில்', பெல்ஜியத்தின் 'சோபினா வெஞ்சர்ஸ்' நிறுவனம் தனது பங்குகளை விற்று லாபம் ஈட்டியுள்ளது.

ஜூன் 25 அன்று நடந்த வர்த்தகத்தில், இந்நிறுவனம் 41.78 லட்சம் பங்குகளை (1.28 சதவீத பங்குகள்) ஒரு பங்கு 424.07 ரூபாய் வீதம் மொத்தம் 177.19 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. வருண் அலக் மற்றும் கஜல் அலக் தொடங்கிய இந்நிறுவனத்தில், மார்ச் 2026 நிலவரப்படி 3.29 சதவீத பங்குகளை வைத்திருந்த சோபினா வெஞ்சர்ஸின் பங்கு இருப்பு, தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல், 'மேதாந்தா' மருத்துவமனைகளை நடத்தும் 'குளோபல் ஹெல்த்' நிறுவன பங்குகளை, 'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் வாங்கியுள்ளது. ஜூன் 24 அன்று நடைபெற்ற 'பிளாக் டீல்' வாயிலாக, அதன் இணை நிறுவனரான சுனில் சச்தேவாவிடமிருந்து 10 லட்சம் பங்குகளை (0.37 சதவீத பங்குகள்) ஹெச்.டி.எப்.சி., வாங்கியுள்ளது. ஒரு பங்கு 1,300 ரூபாய் வீதம் இந்த வர்த்தகத்தின் மதிப்பு 130 கோடி ரூபாயாகும்.

நடப்பு ஜூன் காலாண்டில், இவ்விரு தரப்புக்கும் இடையே நடக்கும் இரண்டாவது பெரிய வர்த்தகம் இதுவாகும். இதற்குமுன், கடந்த மே 25 அன்று, ஒரு பங்கு 1,225 ரூபாய் வீதம் 122.5 கோடி ரூபாய்க்கு 10 லட்சம் பங்குகளை ஹெச்.டி.எப்.சி., வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வர்த்தகங்களுக்கு பின், இணை நிறுவனர் சுனில் சச்தேவாவின் பங்கு இருப்பு 10.79 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us