/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சர்க்கரை உற்பத்தி 43 சதவீதம் உயர்வு
/
சர்க்கரை உற்பத்தி 43 சதவீதம் உயர்வு
ADDED : டிச 03, 2025 02:10 AM

புதுடில்லி: நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் இரு மாதங்களில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 43 சதவீதம் அதிகரித்து, 41.10 லட்சம் டன்னாக பதிவாகி உள்ளதாக இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது அக்டோபரில் துவங்கி செப்டம்பரில் முடிவடையும். முந்தைய ஆண்டு, இதே காலத்தில், 28.80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. நாடு முழுதும் கரும்பு அரவை பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கரும்பு பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகரித்தது, சர்க்கரை உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கிய காரணமானது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
கரும்பு உற்பத்தி
காலம் உற்பத்தி (லட்சம் டன்னில்)
2024 அக்.,& நவ., 28.80
2025 அக்.,& நவ., 41.10
43% உயர்வு

