/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆப்ரிக்காவுக்கு கார் ஏற்றுமதி 2 நிறுவனங்களுடன் சுசூகி கூட்டு
/
ஆப்ரிக்காவுக்கு கார் ஏற்றுமதி 2 நிறுவனங்களுடன் சுசூகி கூட்டு
ஆப்ரிக்காவுக்கு கார் ஏற்றுமதி 2 நிறுவனங்களுடன் சுசூகி கூட்டு
ஆப்ரிக்காவுக்கு கார் ஏற்றுமதி 2 நிறுவனங்களுடன் சுசூகி கூட்டு
ADDED : ஆக 21, 2025 11:50 PM

யோகஹாமா:ஜப்பானின் யோகஹாமாவில் நடந்த ஆப்ரிக்க வளர்ச்சிக்கான மாநாட்டில், ஆப்ரிக்காவுக்கு இந்திய வாகன ஏற்றுமதியை மேம்படுத்த, 'சுசூகி மோட்டார், மிட்ஷு ஓ.எஸ்.கே., லைன்ஸ்' மற்றும் 'ட்ரேட்வால்ட்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
டிஜிட்டல்மயமாக்கல், கார்பன் மாசுபாடு குறைப்பு மற்றும் வலுவான வர்த்தக தொடரை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்த, இந்த ஒப்பந்தம் உதவுகிறது.
ஆப்ரிக்க கண்டம், பட்ஜெட் கார்களின் முக்கிய ஏற்றுமதி மையமாக பார்க்கப்படுகிறது. இந்தியா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, பசுமையான முறையில் செலவுகளை குறைத்து, எந்த தாமதமுமின்றி கார் ஏற்றுமதி செய்ய முடியும்.
அதாவது, கார்பன் மாசுபாட்டை குறைக்க 'மிட்ஷு' நிறுவனத்தின் பசுமை கடல் போக்குவரத்து தீர்வுகள் உதவும். வர்த்தக ஆவணங்களை எளிதாக்கி தாமதங்களை குறைக்க, 'ட்ரேட்வால்ட்ஸ்' நிறுவனத்தின் வர்த்தக தளம் பங்காற்றும். சுசூகி கார்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவி புரிகிறது.

