/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
புத்தாக்க திறன் உதவித்தொகை தமிழக அரசு உயர்த்தி உத்தரவு
/
புத்தாக்க திறன் உதவித்தொகை தமிழக அரசு உயர்த்தி உத்தரவு
புத்தாக்க திறன் உதவித்தொகை தமிழக அரசு உயர்த்தி உத்தரவு
புத்தாக்க திறன் உதவித்தொகை தமிழக அரசு உயர்த்தி உத்தரவு
ADDED : மே 27, 2025 09:59 PM

சென்னை:நிறுவனங்களின் புத்தாக்க திறனை மேம்படுத்த வழங்கப்படும் உதவித் தொகையை, 2 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாகவும்; 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு திறனுடன் கூடிய பல்வேறு தொழில் மேம்பாட்டு பயிற்சிகளை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அளிக்கிறது.
இந்நிறுவனம், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் விவசாயம், தோட்டக்கலை, மீன்வளம் போன்ற துறைகளில், ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்க, உதவித் தொகை வழங்குகிறது.
இதன்படி, புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சமர்ப்பிக்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு, 2 லட்சம் ரூபாயும்; அடுத்த நிலையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதற்கு, 5 லட்சம் ரூபாயும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இந்த உதவித் தொகையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.