/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பாலியஸ்டர் இழை உற்பத்தியில் தைவானுடன் தமிழகம் கைகோர்ப்பு
/
பாலியஸ்டர் இழை உற்பத்தியில் தைவானுடன் தமிழகம் கைகோர்ப்பு
பாலியஸ்டர் இழை உற்பத்தியில் தைவானுடன் தமிழகம் கைகோர்ப்பு
பாலியஸ்டர் இழை உற்பத்தியில் தைவானுடன் தமிழகம் கைகோர்ப்பு
ADDED : அக் 19, 2025 11:14 PM

கோவை: தைவானுடன், தமிழக ஜவுளி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக, ஜவுளி தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஜவுளி துறையினர் கூறியதாவது:
தமிழக ஜவுளி ஏற்றுமதி, 2024 - -25ம் நிதியாண்டில், 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இதில், 5.42 பில்லியன் டாலர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாகும்.
வரும் 2030ல் இந்திய ஜவுளி ஏற்றுமதி 15 பில்லியன் டாலர்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், செயற்கை இழை ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தைவான், அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற, பாலியஸ்டர் ஆடை தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. விளையாட்டு ஆடைகள், தொழில்நுட்ப ஆடைகள் உற்பத்தியில், உலகளவில் முன்னணியில் உள்ளது.
இந்தோனேஷியா, கம்போடியா போன்ற நாடுகளில், ஆடை உற்பத்தியில் தைவான் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. தற்போது இந்தியா பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளது.
கடந்த ஜூலையில், கோவை, திருப்பூரில் தமிழக அரசு ஏற்பாட்டில், தைவான் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடந்தது. இதில், தைவானின் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய ஜவுளித்துறை, பருத்தியில் வலுவாக உள்ளது. பாலியஸ்டர் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படும் நிலையில், தைவானின் தொழில்நுட்ப இயந்திரங்களும், சாயமிடும் தொழில்நுட்பமும், நமக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்.
இதன் வாயிலாக, எம்.எம்.எப்., எனப்படும் செயற்கை நுாலிழை உற்பத்தி, வரும் ஆண்டுகளில் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு ஜவுளி தொழில் துறையினர் தெரிவித்தனர்.