/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மேக்ஸ் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை இல்லை டாடா ஏ.ஐ.ஜி., இன்சூரன்ஸ் முடிவு

ADDED : செப் 27, 2025 12:24 AM

புதுடில்லி:டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், தன் பாலிசிதாரர்களுக்கு மேக்ஸ் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை வசதியை நிறுத்தியுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் இது நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், டாடா ஏ.ஐ.ஜி., பாலிசிதாரர்கள் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், முழு பணத்தையும் அவர்களே முதலில் செலுத்த வேண்டும். இதன் பின், நிறுவனத்திடம் கிளெய்ம் செய்து பணத்தை திரும்ப பெறலாம். இருநிறுவனங்கள் இடையேய கட்டண பிரச்னை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி முதல் 2027 ஜனவரி வரை இரண்டு ஆண்டுகளுக்கு டாடா ஏ.ஐ.ஜி., மற்றும் மேக்ஸ் இடையே கட்டண ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், கடந்த ஜூலையில் டாடா ஏ.ஐ.ஜி., திடீரென கட்டணங்களை குறைக்கும்படி வற்புறுத்தியதாகவும், இதை ஏற்காததால், ரொக்கமில்லா சேவையை அந்நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளதாகவும் மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
எனினும், நோயாளிகள் முன்பணம் செலுத்த தேவையில்லை என்றும், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற கிளெய்ம் செய்ய உதவும் வகையில், மருத்துவமனையில் ஒரு தனியான கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஸ்டார் ஹெல்த் மற்றும் நிவா பூபா காப்பீடு நிறுவனங்களும், இதேபோல மேக்ஸ் மருத்துவமனைகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கான ரொக்கமில்லா சிகிச்சை வசதியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.