/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டாடா ஸ்டீல் வசமாகும் 50% திரிவேணி பங்குகள்
/
டாடா ஸ்டீல் வசமாகும் 50% திரிவேணி பங்குகள்
ADDED : டிச 14, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஒடிஷாவை சேர்ந்த திரிவேணி பெல்லட்ஸ் நிறுவனத்தின் 50.01 சதவீத பங்குகளை வாங்குவதற்கு டாடா ஸ்டீல் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 636 கோடி ரூபாய்க்கு கைமாற உள்ள பங்குகளால், உதிரிபாக துறையில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்டீல் வினியோக தொடர் வலிமையடையும்.
கச்சா இரும்பை, ஒரே மாதிரியான சிறு வடிவங்களில் மாற்றி, அவற்றின் போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுக்கு எளிமையாக மாற்றித் தருவதிலும், ஸ்டீல் குழாய்கள் தயாரிப்பிலும் திரிவேணி பெல்லட்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

