/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தென் மாநில மையங்களில் ரூ.41 கோடிக்கு தேயிலை ஏலம்
/
தென் மாநில மையங்களில் ரூ.41 கோடிக்கு தேயிலை ஏலம்
ADDED : நவ 09, 2025 01:45 AM

குன்னுார்: தென் மாநில தேயிலை ஏலங்களில், 40.72 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த 6, 7 தேதிகளில் நடந்த, 45வது ஏலத்தில், 15.96 லட்சம் கிலோ தேயிலை ஏலத்திற்கு வந்தது; 15.02 லட்சம் கிலோ விற்ற நிலையில், சராசரி விலை கிலோவிற்கு, 107.93 ரூபாயாக இருந்தது. 16.21 கோடி ரூபாய் மொத்த வருமானம், கிடைத்தது.
குன்னுார் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்பட்டதில், 99, 314 கிலோ லட்சம் கிலோ வந்ததில், 100 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 93.69 ரூபாயாக இருந்தது; 93.04 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தில், 1.16 லட்சம் கிலோ முழுமையாக விற்ற நிலையில் வரத்து, விற்பனை சரிந்தது; சராசரி விலை கிலோவிற்கு 3.19 ரூபாய் ஏற்றம் கண்டது.
கோவை ஏல மையத்தில், 5.52 லட்சம் கிலோ வந்ததில், 5.23 லட்சம் கிலோ என 94.68 சதவீதம் விற்றது. சராசரி விலை, 134.33 ரூபாய் என இருந்தது. 7.03 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கொச்சி ஏல மையத்தில், 10.62 லட்சம் கிலோ வந்ததில், 9.80 லட்சம் கிலோ 92.21 சதவீதம் விற்றது. சராசரி விலை, 168.91 ரூபாய் என இருந்தது. 16.55 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
தென் மாநில அளவில், நான்கு தேயிலை ஏலங்களிலும், மொத்தம் 40.72 கோடி ரூபாய் கிடைத்தது.

