/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உற்பத்தியாளர்களுக்கு உதவ டெக் மஹிந்திராவின் மையம்
/
உற்பத்தியாளர்களுக்கு உதவ டெக் மஹிந்திராவின் மையம்
ADDED : ஜன 19, 2025 12:21 AM

சென்னை:டெக் மஹிந்திரா நிறுவனம், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள அதன் வளாகத்தில், மேம்பட்ட உற்பத்தி அனுபவ மையத்தைத் துவங்கியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் டெக் மஹிந்திராவின் தலைமை செயல் அதிகாரி மோஹித் ஜோஷி இதை திறந்து வைத்தனர்.
இந்த மையத்தில் ஆறு தொழில் சார்ந்த கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனம், விண்வெளி, தொழில்துறை, செயல்முறை, ஸ்மார்ட் தொழிற்சாலை சேவைகள் மற்றும் சி.எம்.எம்., எனும் கட்டுமானம், உலோகம் மற்றும் சுரங்கம் ஆகிய ஆறு தொழில்களுக்கான கூடங்கள் உள்ளன.
அதிக செயல்பாட்டுச் செலவுகள், செயல்முறைத் திறனின்மை, வினியோக தொடர் இடையூறுகள் போன்ற தொழில்துறை சவால்களை எதிர்கொள்ள, உற்பத்தியாளர்களுக்கு இந்த மையம் உதவும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும் என, நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனங்கள் முதலீட்டின் மீதான வருவாயை மதிப்பிடவும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இது உதவுவதாகவும், இதனால் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

