டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,320க்கு கீழே சென்றால் ஏற்றத்துக்கான சூழல் வலுவிழக்கும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,320க்கு கீழே சென்றால் ஏற்றத்துக்கான சூழல் வலுவிழக்கும்
UPDATED : ஆக 01, 2026 03:04 AM
ADDED : ஆக 01, 2026 02:49 AM

நேற்று 44 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, அதன்பின் முந்தைய நிறைவை விட 14 புள்ளிகள் கீழே வரை சென்று, அங்கிருந்து மீண்டு 110 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 66 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.09 சதவீத உயர்வுடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.42 சதவீத உயர்வுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 2.91 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.56 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,435 நிறுவனங்களின் பங்குகளில் 2,067 ஏற்றத்துடனும்; 1,252 இறக்கத்துடனும்; 116 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. முக்கிய குறுகிய கால சராசரிகள் மற்றும் இச்சிமோகு கிளவுடுக்கு மேலே நிப்டி நிலைக்க முயற்சிப்பதால், குறுகிய காலத்தில் நிப்டியின் பலம் சற்று மேம்பட்டுள்ளதாகக் கருதலாம்.
எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., (59.21), பாசிட்டிவ் ஆர்.ஓ.சி., ஆகியவையும் மொமென்டம் அதிகரித்து வருவதை காட்டுகின்றன. 'ஸ்டோக்காஸ்டிக்' குறியீடுகள் இரண்டும் 'ஓவர்பாட்' நிலைமையை அடைந்துள்ளதால், அவ்வப்போது இறக்கங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
![]() |
நிப்டி 24,320- - 24,370-க்கு மேலே நிப்டி இருக்கும் வரை ஏற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது என்று கருதலாம். ஏற்றம் வந்தால் 24,450 மற்றும் 24,520 வரை செல்லக்கூடும். 24,320-க்கு கீழே சென்றால் குறுகிய கால ஏற்றத்திற்கான அமைப்பு பலவீனமடையும்.

