தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி புதிய உச்சத்தை எட்டும்போது எச்சரிக்கை தேவை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி புதிய உச்சத்தை எட்டும்போது எச்சரிக்கை தேவை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி புதிய உச்சத்தை எட்டும்போது எச்சரிக்கை தேவை


UPDATED : நவ 27, 2026 02:29 AM

ADDED : நவ 26, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 02:29 AM ADDED : நவ 26, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி மீண்டும் முக்கிய சராசரிகளுக்கு மேலே 25,884ல் நிறைவடைந்துள்ளது. விரிவடைந்து வரும் போலிங்கர் பேண்ட், ஏற்றம் காணும் டிரெண்டு வலுவாக இருப்பதை உணர்த்துகிறது. மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் காளைகளுக்கு சாதகமாக இருக்கின்றன. டைரக்ஷனல் இண்டெக்ஸ் மற்றும் டிரெண்டின் வலுவை காட்டும் இண்டிக்கேட்டர் போன்றவை ஏற்றம் தொடர்வதற்கு சாதகமாக இருக்கின்றன.

ஏற்றம் காணும் 'ஆன்பேலன்ஸ் வால்யூம்' மற்றும் எம்.ஏ.சி.டி., போன்றவையும், வாங்கும் ஆர்வம் தொடர்வதை காட்டுகின்றன. இருப்பினும் ஆர்.எஸ்.ஐ, 'ஓவர்பாட்' நிலையை அடைந்திருப்பதும், ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்களும் ஏற்றத்திற்கான மொமென்டம் சற்று குறைந்திருப்பதை காட்டுவதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மொத்தத்தில், டிரெண்டு பாசிட்டிவ்வாக இருந்தாலுமே, இடையிடையே கன்சாலிடேஷனோ அல்லது லாபத்தை வெளியே எடுக்கும் அளவிலான விற்பனையோ வந்துபோக வாய்ப்புள்ளது. 25,975-26,000 என்ற லெவலுக்கு மேலே சென்றால் 26,300 வரை செல்ல வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 25,733 மற்றும் 25,479 போன்ற லெவல்கள் சர்ப்போர்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் சூழலின்படி புல்லிஷ் டிரெண்டு நிலவுகிற போதிலும், வர்த்தக நேரத்தில் நிப்டி புதிய உச்சங்களை எட்டும்போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

டிரெண்டு பாசிட்டிவ்வாக இருந்தாலுமே, இடையிடையே கன்சாலிடேஷனோ அல்லது லாபத்தை வெளியே எடுக்கும் அளவிலான விற்பனையோ வந்துபோக வாய்ப்புள்ளது



ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., (எம்.ஏ.சி.டி.,(12,26) :6.22 ஆர்.ஓ.சி., :10.53 ஆர்.எஸ்.ஐ., :64.48) 992.00 983 968 1,002 2, 5, 6
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :1.06 ஆர்.ஓ.சி., :0.42 ஆர்.எஸ்.ஐ., :48.72) 418.95 412 406 423 2, 5
ஜியோ பைனான்ஷியல் சர்விசஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :1.61 ஆர்.ஓ.சி., :-1.30 ஆர்.எஸ்.ஐ., :55.31) 227.00 223 216 230 1, 4, 5
ஜே.எஸ்.டபிள்யு., இன்ப்ராஸ்ட்ரக்சர் (எம்.ஏ.சி.டி.,(12,26) :4.93 ஆர்.ஓ.சி., :7.32 ஆர்.எஸ்.ஐ., :68.30) 365.60 360 353 370 5, 6
எல்.ஐ.சி., (எம்.ஏ.சி.டி.,(12,26) :3.27 ஆர்.ஓ.சி., :3.31 ஆர்.எஸ்.ஐ., :59.18) 410.00 406 403 415 5, 6



Image 1651153



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us