தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டியில் ஏற்றம் சற்று தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டியில் ஏற்றம் சற்று தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டியில் ஏற்றம் சற்று தொடர வாய்ப்புள்ளது


UPDATED : செப் 24, 2026 03:38 AM

ADDED : செப் 24, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 03:38 AM ADDED : செப் 24, 2026 03:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 23 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து, 137 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 117 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 1.29 சதவிகித ஏற்றத்துடனும், நிப்டிமிட்கேப்50 குறியீடு குறைந்த பட்சமாக 0.57 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 2.40 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 0.87 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,689 நிறுவனங்களின் பங்குகளில் 2,344 ஏற்றத்துடனும்; 1,232 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி ஏற்றத்தில் நிறைவடைந்தாலுமே முக்கிய சராசரிகளான 14, 21, 50, 100 மற்றும் 200நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே உள்ளது. எம்.ஏ.சி.டி., மொமென்டம் நிப்டி இன்னும் ஓரளவுக்கு பியரிஷாக இருப்பதையே காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., ஹிஸ்டோகிராம் முந்தைய இறக்கம் நடந்த சூழலை விட குறைவாக இருக்கிறது. இது பியரிஷ் மொமென்டம் பலவீனம் அடைந்துவருகிறது என்பதை உறுதி செய்வதாக உள்ளது. ஆர்.ஓ.சி., நெகட்டிவ்வாக இருப்பது மொமென்டம் ஏற்றத்திற்கு முழுமையாக சாதகமாக இல்லை என்பதை காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., நிப்டி பலவீனமாக இருந்தாலும் ஓவர் சோல்டு நிலைமைக்கு செல்லவில்லை என்பதை உணர்த்துகிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் மேல் நோக்கி திரும்பிருப்பது குறுகியகால ஏற்றம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாய் இருக்கிறது. ஆனால், பாஸ்ட் ஸ்டொக்காஸ்டிக் ஏற்கனவே உயர்ந்த நிலையில் இருப்பதால், குறுகியகால ஏற்றத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழலைக் காட்டுகிறது. தற்போதைய சூழலில் 23,350 உடனடி சப்போர்ட்டாக உள்ளது. 23,585-23,625 உடனடி ரெசிஸ்டென்ஸாக உள்ளது. 23,650-க்கு மேல் செல்லும் பட்சத்தில் 23,850-23,900 வரை செல்ல வாய்ப்புள்ளது.

Image 1622487
நிப்டி 23,350-க்கு கீழே சென்றால் 23,200-23,250 வரையிலும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் நிப்டி தற்போது இருக்கும் பலவீனமான சூழலிலும் மிகக் குறுகிய கால அளவில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us