ADDED : ஏப் 26, 2025 12:42 AM

500
கோடி ரூபாய் மதிப்பில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், மின்சார வாகன பாகங்கள் தயாரிப்பு ஆலையை ஹிண்டல்கோ நிறுவனம் துவக்கியுள்ளது. இதையடுத்து, இந்த ஆலையில் இருந்து மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்திற்கு 10,000 பேட்டரி உறைகளை தயாரித்து வழங்க உள்ளது.
1,500
கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பிராண்டாக, குளிர்பான நிறுவனமான 'கோகோ கோலா இந்தியா'வின், 'கின்லே சோடா' பிராண்டு, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சோடா பிரிவில் கின்லே முன்னிலை வகிப்பதால், கின்லே ஸ்ட்ராங் சோடாவிற்கான புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய பிராண்ட் அடையாளத்துடன், அதன் இருப்பை கோகோ கோலா விரிவுபடுத்துகிறது.
2,700
கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பிரெஸ்டீஜ் குழுமம், புதிய பங்கு வெளியிட, செபியிடம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் ஹோட்டல் வணிகப் பிரிவை விரிவாக்கம் செய்யும் நோக்கில், பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
49
சதவீதம் அளவுக்கு, அணுமின் நிலையங்களில் அன்னிய பங்குகளை அனுமதிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது. கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான இலக்குகளை அடைய உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கான சட்ட திருத்தங்களை, ஜூலையில் நடைபெறும் பார்லி., கூட்டத்தொடரில் நிறைவேற்ற, அரசு முடிவு செய்துள்ளது.

