தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 31, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

24.60


கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் வயர்லெஸ் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 24.60 லட்சம் அதிகரித்துள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் மொத்த வயர்லெஸ் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 117.08 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் சந்தாதாரர் எண்ணிக்கை 0.47 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் 0.10 சதவீதம் குறைந்துள்ளது.

87


ரூபாய் மதிப்பு சரிவை குறைக்க, டாலர் விற்பனையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் 87.80 ரூபாயாக சரிந்துள்ளது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று 89 பைசா சரிந்து கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச ஒரு நாள் சரிவை பதிவு செய்துள்ளது.

22.21


கடந்த 2019 - 20 முதல் 2024 - 25 நிதியாண்டு வரையிலான காலத்தில், 22.21 லட்சம் கோடி ரூபாய் செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதே காலத்தில், செஸ் வரி வசூலில் இருந்து 24.29 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us