ADDED : செப் 23, 2026 04:21 AM

36
'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த 2025-26ம் நிதியாண்டில் 36% குறைந்து 7,228.10 கோடி ரூபாயானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
15,000
சமையல் எண்ணெய் பிராண்டான ஹிமானி பெஸ்ட் சாய்ஸ், உணவு பொருட்கள் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 15,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது
71,971
வங்கியில் உள்ள உபரி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, மீண்டும் ரிசர்வ் வங்கி மாறுபடும் வட்டி விகித ஏலம் வாயிலாக 71,971 கோடி ரூபாயை திரட்டியுள்ளது
711
மும்பையில் ஆடம்பர குடியிருப்பை 'ஏஞ்சல் ஒன்' நிறுவன நிர்வாக இயக்குநர் தினேஷ் தாக்கருக்கு 711 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது, 'எம்பஸி டெவலப்மென்ட்ஸ்'
6,406
பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த, 2014-15 முதல் 2025-26 வரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 6,406 கோடி ரூபாயை ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது.
