/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்; மத்திய நிதி அமைச்சகம் அதிருப்தி

UPDATED : ஜூலை 24, 2025 07:33 AM
ADDED : ஜூலை 23, 2025 11:03 PM

புதுடில்லி: 'ஜன் தன் யோஜனா' உள்ளிட்ட, அரசின் அனைவருக்குமான நிதிச்சேவைகள் கிடைக்கச் செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தனியார் துறை வங்கிகள் சரியாகச் செயல்படவில்லை என, மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தனியார் துறை வங்கிகளின் செயல்பாடுகள், திருப்திகரமாக இருப்பது போல தெரியவில்லை.
ஒவ்வொரு 100 ஜன் தன் கணக்குகளில், தனியார் வங்கிகள் வெறும் 3 கணக்குகளை மட்டுமே கொண்டுள்ளன.
இதே போல், தனியார் வங்கிகளில், ஒவ்வொரு 100 புதிய கணக்குகளில், மத்திய அரசின் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்களான ஜீவன் ஜோதி பீமா யோஜனா 2 ஆகவும்; சுரக்ஷா பீமா யோஜனா 4 ஆகவும்; அடல் பென்சன் யோஜனா 11 ஆகவும் உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.