/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வரும் டென்டா வாட்டர்
/
ஐ.பி.ஓ., வரும் டென்டா வாட்டர்
ADDED : ஜன 17, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் டென்டா வாட்டர் அண்டு இன்ப்ரா சொல்யூஷன்ஸ், அதன் ஒரு பங்கின் விலையை 294 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2016 முதல், நீர் மேலாண்மை மற்றும் அது தொடர்பான கட்டமைப்பு தீர்வுகளை வழங்கி வரும் டென்டா வாட்டர், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 220.5 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முன்வந்துள்ளது. 75 லட்சம் புதிய பங்குகள் விற்பனைக்கு வருகின்றன.
ஜன., 22 -- 24 வரை பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 279 --- 294 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜன., 29ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.