/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
/
அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
ADDED : அக் 14, 2024 01:23 AM

மும்பை, :இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக அமெரிக்கா தொடர்வதாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக அமெரிக்கா உள்ளது. இதைத் தொடர்ந்து மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான தாக்கலில், 41,653 நிறுவனங்களில் கிட்டத்தட்ட 37,407 நிறுவனங்கள் அன்னிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இருப்புநிலை குறித்து பதில் அளித்துள்ளன.
நடப்பு 2023 - 24ம் ஆண்டுக்கான இந்திய நேரடி முதலீட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பொறுப்புகள் மற்றும் சொத்துக்கள் மீதான முந்தைய கணக்கெடுப்பின்படி, 29,926 நிறுவனங்களும், தற்போதை கணக்கெடுப்பின்படி, 7,481 நிறுவனங்களும் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.