திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : ஏப் 13, 2025 01:03 AM
இந்தியா உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமையுடன் 25 'சிப்செட்'டு களை உருவாக்கி வருவதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வடிவமைப்பு சார் ஊக்கத் தொகை திட்டமான டி.எல்.ஐ.,யின் கீழ், குறிப்பாக கண்காணிப்பு மற்றும் வைபை அணுகல் போன்ற முக்கிய பகுதிகளில், உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமையுடன் 25 சிப்செட்களை இந்தியா உருவாக்கி வருகிறது. பெங்களூரில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் சார்பில் 13 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இருபது சிப்கள் விரைவில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்காக, உலகத்தரம் வாய்ந்த சிப் வடிவமைப்பு கருவிகளைக் கொண்ட 240 கல்வி நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க உள்ளது. இது நாட்டின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், அடுத்த 10 ஆண்டுகளில் 85,000 திறமையான பொறியாளர்களுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் முதல் 'காலியம் நைட்ரைடு' அடிப்படையிலான செமிகண்டக்டர் ஆலைக்கான அடிக்கல் நாட்டுவிழா சத்தீஸ்கரில் நடந்தது. சென்னையைச் சேர்ந்த பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், 1,143 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் அமைய உள்ளது. இந்த ஆலையில் உயர் அதிர்வெண் கொண்ட செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது மேம்பட்ட 5ஜி மற்றும் 6ஜி தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை பூர்த்தி செய்வதுடன், இந்தியாவின் தொழில்நுட்ப பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது. இந்த ஆலை 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 1,000 சிப்களை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் நேரடி வேலைவாய்ப்புகளையும், லட்சக்கணக்கானோர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுவர் என தெரிகிறது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால், வியட்நாமின் முக்கிய முதலீட்டாளராக உள்ள சாம்சங் நிறுவனம், பின்விளைவுகளை எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சாம்சங்கின் உலகளாவிய தொலைபேசி உற்பத்தியில் கணிசமான பகுதி வியட்நாமில் உள்ளது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க, தன் மாற்று உற்பத்தி தளங்களாக இந்தியா மற்றும் தென்கொரியா குறித்து, நிறுவனம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சாம்சங் விற்கும் 220 மில்லியன் போன்களில், கிட்டத்தட்ட 60 சதவீதம் வியட்நாமில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா விதித்துள்ள 46 சதவீத வரி விதிப்பை குறைப்பது குறித்து, டிரம்ப் நிர்வாகத்துடன் வியட்நாம் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வியட்நாமை நம்பியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தலாம் என சாம்சங் கருதுகிறது.