
1ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12,630 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 10,708 கோடி ரூபாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.
2எச்.டி.எப்.சி., வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 17,616 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, அவ்வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 16,512 கோடி ரூபாயை விட 6.68 சதவீதம் அதிகமாகும்.
3கடந்த 2024ல், தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த இ.டி.எப்., எனப்படும் பரிவர்த்தனை வர்த்தக நிதி, முறையே 20 சதவீதம் மற்றும் 19.66 சதவீதம் சராசரி வருமானத்தை அளித்துஉள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,களில், எச்.டி.எப்.சி., வங்கி சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகித்தது.
4கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 1.56 பில்லியன் டாலர் அதிகரித்து, 677.83 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஆறாவது வாரமாக உயர்ந்துள்ளது. கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பு 676.268 பில்லியன் டாலர்களாக இருந்தது.
5மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு உபகரணங்கள் என, அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்திலுமே, தாமிரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தேவை அதிகரித்துள்ளது. ஆகையால், தாமிரம் தான் அடுத்த தங்கம் என்று வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
6சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தற்போது, கர்நாடகாவின் சிறிய நகரங்களுக்கும் தங்களது வீட்டுக்கடன் வணிகத்தை விரிவுபடுத்திஉள்ளது. கர்நாடகாவில் அடுத்த ஓராண்டுக்குள் 900 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன்களை வழங்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.