ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : பிப் 19, 2025 11:37 PM
அமெரிக்காவின் 'டெஸ்லா' நிறுவனம், முதல்கட்டமாக தன் பெர்லின் ஆலையில் இருந்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து, ஏப்ரலில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லி, மும்பையில் ஷோரூம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ள டெஸ்லா நிறுவனம், நேற்று முன்தினம் இந்தியாவில் 13 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என, விளம்பரம் வெளியிட்டு இருந்தது. மின்சார கார்கள் விற்பனையை துவங்கிய பின், ஆலை அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நேரில் சந்தித்து பேசிய நிலையில், நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
இ ந்திய பொருளாதாரம் தொடர்பான தரவுகளை அனைவரும் எளிதாக அணுகும் வகையில், ரிசர்வ் வங்கி, புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'RBIDATA' என்ற இந்த செயலி வாயிலாக 11,000க்கும் மேற்பட்ட பொருளாதாரம் தொடர்பான வரைபடங்கள், விளக்கப்படங்களை காணலாம். அத்துடன் தரவுகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு, 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப் போவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். இதன் எதிரொலியாக,நேற்று பங்குச் சந்தையில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், 2 முதல் 6 சதவீதம் வரை சரிவை கண்டன. குறிப்பாக, சன் பார்மா நிறுவன பங்குகள் 2 சதவீதமும்; டாக்டர் ரெட்டீஸ் நிறுவன பங்குகள் 3.4 சதவீதமும்; அரபிந்தோ பார்மா நிறுவன பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.
மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இன்ஸ்பேஸ், தொழில்நுட்ப தத்தெடுப்பு நிதிக்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இந்த நிதியானது, விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்காமல், இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றும் நோக்கத்துடன், புத்தொழில் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பில் 60 சதவீதம்; பெரிய நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரை என, திட்டம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 கோடி ரூபாய் வரை, நிதி ஆதரவினை வழங்கும். அரசு சாராத நிறுவனங்கள், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான தங்கள் யோசனைகளை வணிகரீதியாக மாற்றுவதை ஊக்குவிக்கும்.