/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பிரதமரின் வேலைக்கான பயிற்சி மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பிரதமரின் வேலைக்கான பயிற்சி மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு
பிரதமரின் வேலைக்கான பயிற்சி மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு
பிரதமரின் வேலைக்கான பயிற்சி மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : பிப் 20, 2025 10:52 PM

புதுடில்லி:பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ், ஆறு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 730க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, 12 மாத வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, 21 முதல் 24 வயதுக்குட்பட்ட முழு நேர கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பில் பதிவு செய்திருக்காத இளைஞர்களுக்கு, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு, மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இது தவிர, ஒரு முறை நிதி உதவியாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
எண்ணெய், எரிவாயு, வங்கி, நிதி சேவைகள், விருந்தோம்பல், வாகனம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகேயுள்ள வாய்ப்புகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம் என்றும்; அதிகபட்சமாக மூன்று நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.