ADDED : மே 21, 2026 02:38 AM

புதுடில்லி: கடந்த ஏப்ரலில், இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 29.20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக 'இக்ரா' மதிப்பீடு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம்:
கடந்த ஏப்ரலில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை, 19 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்பு, வலுவான கிராமப்புற தேவை, திருமண காலம் நீடிப்பு உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். கடந்த நிதியாண்டு விற்பனை, 22 சதவீதமும், ஏற்றுமதி 23.30 சதவீதமும் அதிகரித்துள்ளன.
குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்கள் வருகை, அதிகரிக்கும் சார்ஜிங் கட்டமைப்புகள், அரசு மானியம், போட்டி விலை ஆகியவை அதன் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நடப்பு நிதியாண்டில், இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, 3 முதல் 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.
குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்கள் வருகை, அதிகரிக்கும் சார்ஜிங் கட்டமைப்புகள், அரசு மானியம் ஆகியவை, டூ - வீலர் விற்பனை உயர காரணம்.
