/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'விரைவில் ஆடைகளுக்காக பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம்' மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்
/
'விரைவில் ஆடைகளுக்காக பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம்' மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்
'விரைவில் ஆடைகளுக்காக பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம்' மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்
'விரைவில் ஆடைகளுக்காக பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம்' மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்
ADDED : ஜூன் 28, 2025 01:04 AM

புதுடில்லி:ஆடைகளுக்கென பிரத்யேக உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நம் நாட்டு ஜவுளித் துறையின் சந்தை மதிப்பு, கடந்த 2014ல் 9.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாயாக உள்ள ஜவுளித் துறையின் மதிப்பை, வரும் 2030க்குள் 29.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஜவுளித் துறையில் 2.50 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
நாடு முழுதும் 500 மாவட்டங்களில் உள்ள சிறிய மற்றும் கைவினை நெசவாளர்களையும், கைத்தறி தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விற்பனை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். அதே நேரத்தில், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளுடன் கையெழுத்திடவுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் அவர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளையும் வழங்கும்.
தொழில்நுட்ப ஜவுளி பிரிவிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நிலைத்தன்மை மற்றும் சுழற்சி தன்மையே இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 2021ல் 10,683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஜவுளித் துறைக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன் வாயிலாக செயற்கை இழை ஆடைகள் மற்றும் துணிகள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில், ஆடைகளுக்கென பிரத்யேக பி.எல்.ஐ., திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.