/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டிரம்ப் விதித்த வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
/
டிரம்ப் விதித்த வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
டிரம்ப் விதித்த வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
டிரம்ப் விதித்த வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
UPDATED : மே 30, 2025 07:43 PM
ADDED : மே 29, 2025 11:28 PM

நியூயார்க்: உலக நாடுகள் மீது அவசர சட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிக்கு தடை விதித்து, அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்., 2ம் தேதி இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தை டிரம்ப் சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
அப்போது, 1977ம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் அடிப்படையில் வரியை டிரம்ப் உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வரிவிதிப்பை பயன்படுத்த இச்சட்டம் அனுமதிக்கவில்லை என்றும்; அமெரிக்கா தொடர்ச்சியாக கடந்த 49 ஆண்டுகளாக வர்த்தகப் பற்றாக்குறையில் தான் இருந்து வருகிறது எனவும் மனுதாரர்கள் தரப்பின் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அதிபரின் அவசர தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகுமா என்பதை பார்லிமென்ட் விவாதிக்க முடியும். நீதிமன்றம் விசாரிக்க முடியாது என அதிபர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை நிராகரித்த நீதிமன்றம், உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.