sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை

/

இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை

இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை

இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை


ADDED : ஏப் 02, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் -பொருட்களுக்கு, இந்தியா அதிக வரி விதிப்பதுடன் மட்டுமல்லாது, வேறு சில வகைகளிலும் தடைவிதிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறை இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது டிரம்ப் அல்ல, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு. அது நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

யு.எஸ்.டி.ஆர்., என்றழைக்கப்படும் இந்த அமைப்பு, ஆண்டு தோறும் வெளியிடப்படும் தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை அதிபர் டிரம்ப் இன்று வெளியிடவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக, இந்த அறிக்கை வெளிவந்து அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

அறிக்கையின் முக்கிய விபரங்கள்:

l இந்தியாவில், சமையல் எண்ணெய் மீது 45 சதவீதம்; ஆப்பிள், மக்காச்சோளம், மோட்டார் சைக்கிள் மீது 50 சதவீதம்; வாகனம், பூக்கள் மீது 60 சதவீதம்; இயற்கை ரப்பர்

மீது 70 சதவீதம்; காபி, திராட்சைப்பழம், வால்நட்ஸ் மீது 100 சதவீதம்; மற்றும் மதுபானங்கள் மீது 150 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது

l அதிக வரி விதிப்பின் காரணமாக, அமெரிக்க நிறுவனங்களால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் சந்தையில் நுழைய முடியவில்லை

l உலகிலேயே இந்தியாவில் தான் விவசாயப் பொருட்கள் இறக்குமதிக்கு, உலக வர்த்தக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, மிக அதிக வரி வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 113 சதவீதமும், அதிகபட்சமாக 300 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படுகிறது

l இந்தியாவில், உலக வர்த்தக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வரி சதவீதத்துக்கும், வசூலிக்கப்படும் வரி சதவீதத்துக்கும் எப்போதுமே பெரிய வித்தியாசம் உள்ளது.

இதன் காரணமாக, விருப்பத்துக்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் விவசாய மற்றும் பிற பொருட்களின் மீது இறக்குமதி வரி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, அமெரிக்க பணியாளர்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்

l உலக வர்த்தக அமைப்பால், 'உயிர் காக்கும் மருந்துகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ள மருந்து பொருட்களின் மீதும் அதிக சுங்க வரி வசூலிக்கப்படுகிறது

l அதிக வரி மட்டுமின்றி; இறக்குமதி தடை, உரிமம் பெறும் நடைமுறை, கட்டாய தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் உள்நாட்டு சோதனை, சான்றிதழ் தேவை, விலை கட்டுப்பாடு என பல்வேறு வழிகளில் அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு தடைக் கற்களை போடுகிறது.

ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவை உடனடியாக அமலுக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை

l சேவைகள் துறையைப் பொறுத்தவரை, முக்கிய பிரிவுகளான நிதி, தொழில்முறை மற்றும் சில்லரை பிரிவுகளில் அன்னிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை ஏமாற்றி வருகிறார்கள்

பரஸ்பர வரி விதிப்பது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பல நாடுகளின் வரிவிதிப்பு குறித்த பட்டியலை அவர் காட்டினார். அதில், இரண்டு இடங்களில் இந்தியா இடம்பெற்றுஉள்ளது.

பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

துரதிருஷ்டவசமாக, இத்தனை ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவை ஏமாற்றி வந்துள்

ளன. அமெரிக்கர்களின் உழைப்புகளை அவர்கள் மதிக்கவில்லை. அதனால், அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் நலனுக்காக நல்ல ஒரு முடிவை அதிபர் எடுக்க உள்ளார்.

பரஸ்பர வரிக்கான காலம் வந்துவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை, அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

குறைவாகவே வரி வசூலிக்கிறது இந்தியா



இந்தியாவின் வரி விதிப்பு கொள்கை வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கவும், அரசின் வரி வருவாயை பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது. சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களில், வரி விதிப்பை ஒழுங்குபடுத்துவதிலும், வர்த்தகத்தை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராக உள்ள இந்தியா, அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வரியைக் காட்டிலும் குறைவாகவே வரி வசூலித்து வருகிறது.

றது.

- ஜிதின் பிரசாதாஇணை அமைச்சர், மத்திய வர்த்தகத்துறை








      Dinamalar
      Follow us