உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 30, 2026 01:30 AM

அ நிறம் | அளவு
மும்பை: வேதாந்தா குழுமம், அடுத்த மாதம் ஐந்து தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட உள்ளது. இந்த மாற்றத்தின் வாயிலாக, ஒவ்வொரு நிறுவனமும் தனித்துவமான வளர்ச்சியை காண சுதந்திரம் கொடுக்கப்படும் என, அக்குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு பின், தற்போது 2.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ள குழுமத்தின் சந்தை மதிப்பு வெகுவாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இக்குழுமம், கடந்த சில ஆண்டுகளாகவே மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடன் சுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக, தற்போது குழுமம் தனி நிறுவனங்களாக பிரிக்கப்படுகிறது.
