/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
/
நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
ADDED : செப் 23, 2024 01:29 AM

மாதம் 12 சதவீத நிச்சய வருமானம், இடரே இல்லாமல் முதலீட்டின் மீது 120 சதவீத பலன். முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்து வலையில் விழ வைக்க, மோசடி ஆசாமிகள் பெரும்பாலும் பயன்படுத்தும் உத்திகள் தான் இவை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய நிதி மோசடிகள் அரங்கேறி வருகின்றன. நிதி கல்வி குறைவாக இருப்பது, இவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. நிதி மோசடிகளின் உத்திகளும், வலை விரிக்கும் விதங்களும் மாறுபட்டாலும், அடிப்படையில் இவை பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன. இவற்றை அறிந்திருப்பது, நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
தனிநபர் கணக்கு: முதலீடு
வாய்ப்பை வழங்குபவர், பணத்தை நிறுவன கணக்கில் செலுத்தாமல், தனி கணக்கில் செலுத்த கூறினால் அது நிச்சயம் மோசடியாக தான் இருக்கும். இடைத்தரகரை தவிர்க்க இந்த வழி ஏற்றது என கூறப்பட்டாலும், பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட இதுவே உகந்த வழி. முறையான நிறுவன கணக்கு இருக்க வேண்டும்.
அதிக பலன்:
மாதம் இத்தனை சதவீத வருமானம் அல்லது இடரே இல்லாமல் பல மடங்கு லாபம் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டால், உடனே எச்சரிக்கையாவது நல்லது. எல்லா வகை முதலீட்டிலும் இடர் உண்டு. அதிக பலன் எனும் போது இடரும் அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக வாக்குறுதிகள் அமைந்தால் எச்சரிக்கை தேவை.
அவசர முதலீடு:
உடனே முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், பொன்னான வாய்ப்பு தவறிப்போகும் என
முதலீட்டாளர்களை அவசரமாக பணம் செலுத்த வலியுறுத்துவதும் ஏமாற்றும் உத்தியாக இருக்கலாம். உண்மையான முதலீடு வாய்ப்புகளுக்கு உடனடி முடிவு அவசியம் இல்லை. யோசித்து நிதானமாக செயல்படலாம்.
வெற்றி கதைகள்:
இதற்கு முன் பணம் போட்டு பலன்பெற்றவர்களின் வெற்றிக் கதைகளையும் மோசடி எண்ணம் கொண்டவர்கள் விவரித்து கவனத்தை ஈர்க்கலாம். பொய்யான வெற்றிக் கதைகளின் சான்றிதழ்களை அளிக்கலாம். இவை தொடர்பான ஆவணங்களை கவனமாக சோதித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்வியல் வலை:
அதிக லாபம் தரும் முதலீடு வாய்ப்புகளை போலியாக முன்வைப்பவர்கள், பெரும்பாலும்
வெளிநாட்டு விடுமுறை, சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் போன்ற தோற்றங்களை காண்பித்து ஈர்க்கின்றனர். மாறாக, இலக்கு மற்றும் அதை அடையும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்.