/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'தகதக ' தங்கம் பாதுகாப்பான முதலீடாக தொடருமா?
/
'தகதக ' தங்கம் பாதுகாப்பான முதலீடாக தொடருமா?
ADDED : மார் 17, 2025 12:26 AM

மும்பை,:தங்கத்தின் விலை ஜாண் சறுக்கினால், முழம் ஏறி, புதிய உச்சத்தை தொடுவது தொடர்கதையாகி வருகிறது. அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
உலக நாடுகள் இடையே இறக்குமதி வரி விதிப்பில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்தார். இதனால், பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற வர்த்தக போக்கு காணப்படுகிறது.
கரன்சி சந்தையும் சொல்லிக் கொள்ளும்படி லாபம் பெற்றுத் தருவதாக இல்லை. இதனால், முதலீட்டாளர்களின் ஒரே பாதுகாப்பான உலோகமாக தங்கம், அவர்களது கண்களில் ஜொலிக்கிறது. தங்கத்தில் முதலீடு கண்டபடி அதிகரிப்பதால், உலகம் முழுதும் அதன் விலை தாறுமாறாக உயர்கிறது.