/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்க பணி துவக்கம்
/
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்க பணி துவக்கம்
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்க பணி துவக்கம்
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்க பணி துவக்கம்
ADDED : ஜூலை 09, 2025 12:49 AM

திருப்போரூர்:தையூரில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு வளாகத்தில், அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மைய மாதிரி வடிவமைப்பு துவக்க விழா நடந்தது.
அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை நிறுவி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக, 2024 ஜனவரியில் நடந்த தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், சென்னை ஐ.ஐ.டி., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.
இதை, திருப்போரூர் அடுத்த தையூரில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு வளாகத்தில், 180 கோடி ரூபாய் மதிப்பில், 65,000 சதுரடி பரப்பளவில் அமைக்கவும், 2026ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு, ஹைட்ரஜன் வாயிலாக இயக்கப்படும் வாகனங்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மாதிரி வடிவமைப்பு வெளியிடுதல், திட்ட செயலாக்க அறிக்கை பரிமாறுதல் மற்றும் துவக்க விழா, திருப்போரூரை அடுத்த தையூரில் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் ராஜா பங்கேற்று, மையத்தின் கட்டட மாதிரி வடிவமைப்பை திறந்து வைத்தார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் உன்சூன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன இயக்குநர் தரேஸ் அஹமத் ஆகியோர் பங்கேற்றனர்.

