/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ஜின்கா லாஜிஸ்டிக்ஸ்' பங்கு விலை அறிவிப்பு
/
'ஜின்கா லாஜிஸ்டிக்ஸ்' பங்கு விலை அறிவிப்பு
ADDED : நவ 11, 2024 01:02 AM

மும்பை:புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ள, 'ஜின்கா லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 273 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஜின்கா லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனம்,'பிளாக் பக்' என்ற செயலி வாயிலாக, சரக்கு போக்குவரத்துக்கென பிரத்யேக பாஸ்டேக், ஜி.பி.எஸ்., வசதி, வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவையை அளித்து வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, மொத்தம் 1,115 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 2.01 கோடி புதிய பங்குகள் வாயிலாக 550 கோடி ரூபாயும்; முதலீட்டாளர்கள் வசமுள்ள 2.07 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக 564.72 கோடி ரூபாயும் அடங்கும்.
ஒரு பங்கின் விலை 259 -- 273 ரூபாயாக நிர்ணயித்துள்ள ஜின்கா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தன் ஊழியர்களுக்கு 26,000 பங்குகள் வரை, பங்கு ஒன்றின் விலையில் 25 ரூபாய் தள்ளுபடியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் 18ம் தேதி வரை, சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். நவ., 21ம் தேதி சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.