ADDED : செப் 14, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ண்டிகை காலத்தை முன்னிட்டு, விமானப் பயணியரை கவரும் விதமாக, விமானக் கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம் என, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' அறிவித்துள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், குறிப்பிட்ட சில உள்நாட்டு மற்றும் சர்வதேச நகரங்களுக்கு, விமானக் கட்டணத்தில், குறுகிய கால சலுகையாக, 25 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவித்துள்ளது.
தள்ளுபடியை பெற, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
மேலும், செப்டம்பர் மாதம் துவங்கியதில் இருந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், தேவை அதிகரித்து விமானக் கட்டணம் அதிகரிப்பது வழக்கமாகும்.