ADDED : அக் 02, 2025 12:58 AM

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் நிலையாக வைத்தது. இது இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது. அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு 6.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், பணவீக்கம் 2.60 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகக் காட்டுகிறது.
ரூபாயின் மதிப்பு 88.70க்கு அருகில், எந்த பெரிய சலனமும் இன்றி இருந்தது. எதிர்ப்பு 89.00--89.20 என்ற அளவிலும், ஆதரவு 88.40--88.50 என்ற அளவிலும் உள்ளது. 88.20-க்கு கீழ் சென்றால் மட்டுமே பெரிய மாற்றம் ஏற்படும்.தங்கம், வெள்ளி உட்பட அனைத்து உலோகங்களும் பெரிய அளவில் விலை ஏறி வருகின்றன. பிளாட்டினம் 57 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தாமிரம், துத்தநாகம், அலுமினியம் போன்ற தொழில்துறை உலோகங்களும் வலுவான தேவை மற்றும் உற்பத்திக் குறைபாடு காரணமாக, விலை ஏறி வருகின்றன.
அமெரிக்க அரசாங்க நிதியில் உள்ள குழப்பம் காரணமாக, முக்கியமான வேலைவாய்ப்புத் தரவுகள் வெளியாவது தாமதமாகலாம் என்ற அச்சம், டாலர் மீது அழுத்தத்தை
ஏற்படுத்துகிறது.
இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாகவும், வளர்ச்சியுடனும் உள்ளது. அதே சமயம், அமெரிக்க டாலர் பலவீனமாக இருப்பதால், உலகளவில் உலோகங்களின் விலை தொடர்ந்து உயரும். பலவீனமான டாலர் காரணமாக, இந்தியாவின் ரூபாய்க்கு சற்று சாதகமான சூழல் உருவாகியுள்ளது. வர்த்தகப் பிரச்னைகள் சரியானால், ரூபாயின் மதிப்பு
உயர வாய்ப்புள்ளது.