மியூச்சுவல் பண்டு முதலீடுகளுக்கு டிஜிட்டல் முறையில் கடன் திட்டம்
மியூச்சுவல் பண்டு முதலீடுகளுக்கு டிஜிட்டல் முறையில் கடன் திட்டம்
ADDED : மார் 06, 2026 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ச வுத் இந்தியன் வங்கி, ஸ்மால்கேஸ்' நிறுவனத்துடன் இணைந்து மியூச்சுவல் பண்டு முதலீடுகள் மீது டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு 9.99 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இக்கடன் வழங்கப்படும் என்றும், கடன் பெறுவதற்கான விண்ணப்பம், முதலீடுகளை அடமானம் வைத்தல் மற்றும் கடன் தொகை விடுவிப்பு ஆகிய அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் நேரடி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, வங்கியுடன் இணைந்துள்ள பிற நிதி தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பெறலாம். விரைவில் டிமேட்டில் உள்ள பங்குகள் மற்றும் இதர நிதி சொத்துக்கள் மீதும் கடன் வழங்கும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

