'டிக்சன் டெக்னாலஜிஸ்' பங்குகள் ரூ.10,000க்கும் கீழே இறங்கியது
'டிக்சன் டெக்னாலஜிஸ்' பங்குகள் ரூ.10,000க்கும் கீழே இறங்கியது
ADDED : ஜன 28, 2026 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மி ன்னணு சாதன உற்பத்தி நிறுவனமான, 'டிக்சன் டெக்னாலஜிஸ்' நிறுவன பங்குகள் விலை, கடந்த 2024 ஜூன் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக 10,000 ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது. ஓராண்டு உச்ச விலையான 18,471 ரூபாயிலிருந்து 44 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த 16 வர்த்தக தினங்களில் இந்நிறுவன பங்குகள் விலை 12 நாட்களில் சரிவுடனே காணப்பட்டது. இந்தச்சூழலில், இந்நிறுவன பங்கின் விலை 8,724 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனமான, 'மோர்கன் ஸ்டான்லி' கணித்துள்ளது. அதாவது, தற்போதைய விலையைவிட இன்னும் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

