தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி குறைந்தது தங்கம், வெள்ளி விலை
தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி குறைந்தது தங்கம், வெள்ளி விலை
ADDED : அக் 19, 2025 02:06 AM

தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்வு கண்டு, வரலாறு காணாத வகையில் உச்சத்தில் நீடித்த நிலையில், நேற்று விலை சரிவை கண்டன.
தற்காலிகமாக உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் தணிந்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று, லாபத்தை பெற்றது சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
எம்.சி.எக்ஸ்., சந்தையில் , டில்லி நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை. நேற்று முன்தினம் 10 கிராம் 1,32,294 ரூபாயை தொட்ட நிலையில், நேற்று 3 சதவீதம் குறைந்து, 1,25,957 ரூபாய்க்கு விற்பனையானது.
இதே போல், வெள்ளி விலை ஒரு கிலோ 1,70,415 ரூபாயில் இருந்து, நேற்று 8 சதவீதம் சரிவை கண்டு, 1,53,929 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தங்கம்,வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், தற்போதைய விலை சரிவு ஆரோக்கியமான ஒன்று எனவும், விலை குறையும் போது, அதனை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற வாய்ப்பாக முதலீட்டாளர்கள் மாற்றி கொள்ளலாம் எனவும் சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.