sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இனசூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

/

இனசூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

இனசூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?

இனசூரன்ஸ்: பாலிசி 'லேப்ஸ்' ஆகாமல் பாதுகாப்பது எப்படி?


ADDED : அக் 26, 2025 09:33 PM

Google News

ADDED : அக் 26, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரீமியம் செலுத்தும் தேதியை மறந்தால், பாலிசி 'லேப்ஸ்' ஆகி, பல ஆண்டுகால சேமிப்பும், காப்பும் ஒரே நேரத்தில் நஷ்டமாகலாம். இதைத் தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, லேப்ஸ் ஆகாமல் இருக்க வேறு வழிகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

பாலிசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


ஒருமுறை பிரீமியம் பாலிசி: முடிந்தால், 'சிங்கிள் பிரீமியம்' பாலிசி வாங்கலாம். ஒரே முறை தொகை செலுத்தி, முடித்துவிடலாம். வசதி இருந்தால் இது சிறந்தது.

பிரீமியம் சுமை தெரிந்திருக்கட்டும்: பாலிசி வாங்கும் போது, உங்கள் வருமானத்துக்கு ஏற்ப பிரீமியத்தை தேர்ந்தெடுங்கள். வருமானம் அதிகரிக்கும் போது, புதிய பாலிசிகளை சேர்க்கலாம்.

பிரீமியம் விலக்கு ரைடர்: இந்த ஆப்ஷன் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். நோய், விபத்து போன்ற காரணங்களால், நீங்கள் பிரீமியம் செலுத்த முடியாவிட்டாலும், காப்பு தொடரும்.

சரியான பிரீமியம் தேதி, ஆண்டு: பணிபுரியும் இடத்தில் போனஸ் கிடைக்கும் மாதத்தில் பிரீமியம் தேதியை வைத்துக் கொள்ளலாம் அல்லது பணம் வரும் பருவத்தைப் பார்த்து, காலாண்டு அல்லது மாதாந்திர பிரீமிய தேதியை நிர்ணயிக்கலாம்.

ஆட்டோ டெபிட் / கிரெடிட் கார்டு: வங்கிக் கணக்கில் ஆட்டோ டெபிட் வசதியை அமைக்கலாம். அல்லது கிரெடிட் கார்டில் ஆட்டோ பே செய்யலாம். ஆனால் கிரெடிட் கார்டு பில் நேரத்துக்கு செலுத்தப்படாவிட்டால், பெரிய வட்டி சுமை ஏற்படும், நினைவில் கொள்ளவும்!

பாலிசி வாங்கிய பின் செய்யவேண்டியவை


நினைவூட்டல் அமைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய தினங்களைப் பிரீமியம் தேதியாக வைத்துக்கொள்ளுங்கள், மறக்காது.

குடும்ப அவசர நிதி: சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரை செலவுகளைச் சமாளிக்கக் கூடிய அவசரகால நிதியை வைத்திருங்கள். அதில் காப்பீடு பிரீமியமும் சேரட்டும்.

கிரேஸ் பீரியட்: மறந்துவிட்டால், இந்த அவகாசம் உள்ளபோதே செலுத்துங்கள். காப்பு தொடரும்.

அவசர கடன்: பணம் இல்லாத நிலையில், பிக்சட் அல்லது வேறு முதலீட்டில் இருந்து கடன் எடுத்து பிரீமியம் செலுத்தலாம். உங்கள் காப்பீட்டு பாலிசி யிலேயே நீங்கள் கடன் வாங்கலாம். இது, ஒரே முறை செய்யும் அவசரத் திட்டம் மட்டுமே.

தொடர்பு விவரங்கள் புதுப்பிக்கவும்: முகவரி, மொபைல், மின்னஞ்சல் மாற்றங்களை உடனே காப்பீடு நிறுவனத்திடம் புதுப்பிக்கவும்.

பாலிசி மீளாய்வு: உங்கள் நிதி நோக்கங்களுடன் பாலிசி பொருந்துகிறதா என்பதை அவ்வப்போது பரிசீலிக்கவும்.

முன் பிரீமியம் டிபாசிட்: சில நிறுவனங்கள் எதிர்கால பிரீமியம் தொகையை முன்பே செலுத்தும் வாய்ப்பு கொடுக்கின்றன. இதை பயன்படுத்தி, சில ஆண்டுகள் காப்பை உறுதிசெய்யலாம்.

பாலிசி லேப்ஸ் ஆனால்?


முதலில் கூறியது போல, பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பாலிசி உயிர்ப்பிக்க வாய்ப்பு உண்டு. காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, 'ரிவைவல் கோட்' கேட்டு, நிலுவையில் உள்ள பிரீமியம், வட்டி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துங்கள். நீண்ட நாட்கள் காத்தால் அபராதம் கூடும்.

சில சமயம் மருத்துவ பரிசோதனை தேவையாகலாம்; அதைச் செய்துவிடுங்கள். பிரீமியம் தொடர முடியாத நிலை என்றால், பாலிசியை முழுமையாக லாப்ஸ் ஆக விடாமல், பெய்ட் அப் பாலிசி ஆக்கிக் கொள்ளலாம். இல்லையெனில், சரண்டர் செய்து, பாலிசி பெற்றிருக்கும் மதிப்பில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம்.

முடிவாக ஒன்று


சிறு அலட்சியம் கூட, பல ஆண்டு சேமிப்பையும், காப்பையும் வீணாக்கிவிடும். அதனால் உரிய நேரத்தில் பிரீமியம் செலுத்துதல், நினைவூட்டல் அமைத்தல், அவசர நிதி வைத்திருத்தல் ஆகிய மூன்றும் உங்கள் பாலிசியை உயிருடன் வைத்திருக்கும் முக்கிய அடித்தளங்கள்.

க.நித்ய கல்யாணி

காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர்,

பெருநிறுவன வரலாற்றாசிரியர்






      Dinamalar
      Follow us