ஒருவரின் வருமான விபரங்களை ஆர்.டி.ஐ., வாயிலாக கோர முடியாது
ஒருவரின் வருமான விபரங்களை ஆர்.டி.ஐ., வாயிலாக கோர முடியாது
ADDED : மே 05, 2026 02:20 AM

கணவன் அல்லது மனைவியின் வருமான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், பராமரிப்பு தொகைக்காக தனது கணவரின் விபரங்களை கோரி அவரது மனைவி ஆர்.டி.ஐ., விண்ணப்பம் செய்திருந்த நிலையில், ஏப்ரல் 28ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு:
ஒரு நபரின் வருமான விபரங்கள் தனிப்பட்டவை என்பதால், அவற்றை ஆர்.டி.ஐ., வாயிலாக தெரிந்துகொள்ள முடியாது. ஆர்.டி.ஐ., என்பது பொது நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து பொது நலனுக்காக தகவல்களை கோருவதற்கு உதவுகிறது. கணவன் அல்லது மனைவியின் வருமான விபரங்களை பெறுவதில் பொது நலன் ஏதுமில்லை என்பதால் தனிப்பட்ட வருமான விபரங்களை ஆர்.டி.ஐ., வாயிலாக கோர முடியாது.
விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொகை சார்ந்த வழக்குகளில், கணவரின் வருமான விபரங்களை பெறுவதற்கு சட்ட ரீதியாகவே வழிகள் இருக்கின்றன. எனவே, அதற்கு மாற்றாக ஆர்.டி.ஐ., பயன்படுத்தி வருமான விபரங்களை கோர முடியாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

