ADDED : அக் 02, 2025 01:24 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,620.55 24,867.95 24,605.95 24,836.30
நிப்டி பேங்க் 54,653.90 55,406.75 54,582.55 55,347.95
நிப்டி
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 225 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 16- குறியீடுகள் 0.36% (நெக்ஸ்ட்50) முதல் 1.39% (மைக்ரோகேப் 250) வரையிலான ஏற்றத்துடனும்; 17 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் 0.21% (ஆயில் & கேஸ்) முதல் 3.97% (மீடியா) வரையிலான ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,159 பங்குகளில் 2,198 ஏற்றத்துடனும், 874 இறக்கத்துடனும், 87 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): -54.87, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):47.23 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -0.93 என இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 24,770 என்ற அளவுக்கு கீழே போகாமல் வர்த்தகம் ஆனால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. சந்தை சார்ந்த செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆதரவு 24670 24510 24410
தடுப்பு 24935 25030 25130
நிப்டி பேங்க்
ஏற்றம் உருவாக, எதிர்பார்த்த அளவான 54,653-ல் ஆரம்பித்து, அதன் பின்னர் வேகமான ஏற்றத்துடன் நடைபெற்ற நிப்டி பேங்க், நண்பகலுக்கு மேல் ஏற்றத்தின் வேகம் குறைந்து, நாளின் இறுதியில் 712 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 20.02, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 55.28 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 0.84 என்ற அளவில் இருக்கிறது. ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழல் இருக்கின்ற போதும், செய்திகளே அது நடப்பதற்கான ஆதாரமாக இருக்கும். 55,110 என்ற அளவுக்கு கீழே இறங்காமல் இருந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆதரவு 54820 54290 53975
தடுப்பு 55640 55935 56250
பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும்.
மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 1, 2025.