வெகுமதி புள்ளிகள் : இலவசமாக பார்க்காமல் சொத்தாக பார்க்க வேண்டும்
வெகுமதி புள்ளிகள் : இலவசமாக பார்க்காமல் சொத்தாக பார்க்க வேண்டும்
ADDED : டிச 07, 2025 02:18 AM

யு. பி.ஐ., செயலிகளில் வழங்கப்படும் 'கேஷ்பேக்' மற்றும் வெகுமதி புள்ளிகளை அதிக பயனுள்ளதாக பயன்படுத்த, நிபுணர்கள் சில வழிகளை பரிந்துரைக்கின்றனர். உதாரணத்திற்கு, சில செயலிகளில் ஒரு புள்ளி கிடைத்தால் அதை ஒரு ரூபாயாக மாற்ற முடியும். அதேநேரம், சிலவற்றில், ஒரு புள்ளியை 40 பைசாவாகத்தான் மாற்ற முடியும். எனவே, இதை கவனமாக பார்க்க வேண்டும் என்கின்றனர்.
* 'கேஷ்பேக்' சதவீதம் எவ்வளவாக இருந்தாலும், வழங்கப்படும் புள்ளிகளை எவ்வளவு தொகையாக மாற்ற முடியும் என்பதை பார்க்க வேண்டும்
* வெகுமதி புள்ளிகளை 'இலவச பரிசாக' கருதாமல், ஒரு 'சொத்தாக' பார்க்க வேண்டும்
* உடனடி 'கேஷ்பேக்' அல்லது அதிக மதிப்புள்ள 'வவுச்சர்'கள் வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும்
* பெரிய தொகையில் பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தால், வவுச்சர்கள் உதவும்
* பயணம், ஷாப்பிங், உணவு, திரைப்படம், பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு அதிக சலுகைகள், வெகுமதிகள் வழங்கப்படுகின்றன
* எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பேஷன் டிசைனிங் பொருட்களை வாங்கவும் அதிக சலுகைகள் தரப்படுகின்றன

