/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
'ஜூலை - செப்., ஸ்மார்ட்போன் சந்தை 3% வளர்ச்சி'
/
'ஜூலை - செப்., ஸ்மார்ட்போன் சந்தை 3% வளர்ச்சி'
ADDED : அக் 22, 2025 11:54 PM

புதுடில்லி: கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக 'ஓம்டியா' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வளர்ச்சி விற்பனையை குறிக்காது; மாறாக தொழிற்சாலைகளில் இருந்து விற்பனையகங்களுக்கு அனுப்பப் பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
செப்டம்பர் காலாண்டில் தொழிற்சாலைகளில் இருந்து விற்பனையகங்களுக்கு 4.84 கோடி ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகம்.
வினியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்களுக்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை சார்ந்த ஊக்கத்தொகை அறிவித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இதுதவிர கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதும் ஒரு காரணம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.