sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

/

பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பி.எப்., அடிப்படை ஊதிய வரம்பு; அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஜன 09, 2026 11:04 AM

ADDED : ஜன 09, 2026 02:15 AM

Google News

UPDATED : ஜன 09, 2026 11:04 AM ADDED : ஜன 09, 2026 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊழியர்களின் பி.எப்., பங்களிப்புக்கான அதிகபட்ச அடிப்படை சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கும், இ.பி.எப்.ஓ., அமைப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வரம்பு 2014 முதல் இன்னும் மாறாமல் இருப்பது, ஊழியர்களின் ஓய்வுகால சேமிப்பை பாதிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Image 1519075

அதில், தற்போது பி.எப்., பங்களிப்புக்கான அதிகபட்ச அடிப்படை சம்பள வரம்பு 15,000 ரூபாயாக உள்ளது.முன்னதாக 6,500 ரூபாயாக இருந்த அடிப்படை சம்பள வரம்பு, கடந்த 2014ம் ஆண்டு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தொழிலாளருக்கு என்ன பலன் ?
1 சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகை அதிகரிக்கும். இதனால், ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகை அதிகரிக்கும்.
2 நிறுவன பங்களிப்பில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்துக்கு செல்வதால், வருங்காலத்தில் கிடைக்கும் மாத ஓய்வூதியமும் அதிகரிக்கும்.
3 அதேநேரம், பி.எப்., பிடித்தம் அதிகரிப்பதால், ஊழியர்கள் மாதந்தோறும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத் தொகை சற்றே குறையக்கூடும். நிறுவனத்துக்கு கூடுதல் செலவாகும்.








      Dinamalar
      Follow us