sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,000 ஒரு முக்கிய ரெசிஸ்டென்ஸாக இருக்கக்கூடும்

/

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,000 ஒரு முக்கிய ரெசிஸ்டென்ஸாக இருக்கக்கூடும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,000 ஒரு முக்கிய ரெசிஸ்டென்ஸாக இருக்கக்கூடும்

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,000 ஒரு முக்கிய ரெசிஸ்டென்ஸாக இருக்கக்கூடும்


UPDATED : மார் 06, 2026 01:39 AM

ADDED : மார் 06, 2026 01:38 AM

Google News

UPDATED : மார் 06, 2026 01:39 AM ADDED : மார் 06, 2026 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்து உயர்ந்த புள்ளிகளை இழந்து, பின் மீண்டு என தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி, இரண்டு மணிக்கு மேல் திடீரென ஒரே பாய்ச்சலாக கணிசமான ஏற்றத்தைச் சந்தித்து, நாளின் இறுதியில் 285 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 1.04 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.85 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.29 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.59 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1544832

வர்த்தகம் நடந்த 3,335 பங்குகளில், 2,210 ஏற்றத்துடனும்; 1,038 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 20, 50, 100 மற்றும் 200 நாள் சாரசரிகளுக்கு கீழேயே இன்னும் நிப்டி இருக்கிறது. குறுகிய கால அளவீட்டில் இறக்கத்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதை போன்ற சூழல் நிலவுகின்ற போதிலும், ஒரு சில இண்டிகேட்டர்கள் 'ஓவர் சோல்டு' எனும் நிலைக்கு அருகில் இருப்பதால், சிறியதொரு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. தற்போதைக்கு 24,850/25,000 எனும் லெவல்கள் உடனடி ரெசிஸ்டென்ஸாக தெரிகிறது. 24,400 ஒரு முக்கிய சப்போர்ட்டாக உருவெடுத்துள்ளது. செய்திகளுக்கு ஏற்ப, நிலைமை மாற வாய்ப்புள்ளதால், டெக்னிக்கல் லெவல்கள் வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Image 1544833






      Dinamalar
      Follow us