sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 டெக்னிகல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

/

 டெக்னிகல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

 டெக்னிகல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்

 டெக்னிகல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்


UPDATED : பிப் 07, 2026 03:22 AM

ADDED : பிப் 07, 2026 01:37 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 03:22 AM ADDED : பிப் 07, 2026 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1532295

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் வர்த்தகமான நிப்டி, மதியம் 3 மணிக்கும் மேல் சிறியதொரு ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 50 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.19 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.79 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 2.27 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி அண்டு டெலிகாம்' குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,239 பங்குகளில், 1,340 ஏற்றத்துடனும்; 1,779 இறக்கத்துடனும்; 120 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., போன்றவை நிப்டியில் ஏற்றம் வரவாய்ப்பிருப்பதைப் போன்ற தோற்றத்தை காட்டினாலும், அது ஸ்ட்ராங்கான தோற்றமாக இல்லை. எனவே, ஓரளவு ஏற்றம் அல்லது திசை தெரியா நிலையில் நிப்டி இருப்பதற்கான வாய்ப்புள்ளது. 25,700-ஐ தாண்டி வேகமான ஏற்றம் வந்தால், 26,000 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் இது நடந்துவிடக்கூடும்.

Image 1532322






      Dinamalar
      Follow us