sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் வந்து போகலாம்!

/

அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் வந்து போகலாம்!

அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் வந்து போகலாம்!

அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் வந்து போகலாம்!


ADDED : செப் 30, 2025 12:03 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி

ஆரம்பத்தில் ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நண்பகலுக்கு மேல் சிறிய இறக்கத்தை கண்டு, மீண்டும் ஏற்றத்தை சந்தித்து, இறுதியில் 19 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 5 குறியீடுகள் இறக்கத்துடனும், 17 துறை சார்ந்த குறியீடுகளில் 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. துறை சார்ந்த குறியீடுகளில் பொதுத்துறை வங்கி மற்றும் ஆயில் அண்டு காஸ் குறியீடுகள் அதிக ஏற்றத்துடனும்; மீடியா மற்றும் தனியார் துறை வங்கிகள் அதிக இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,168 பங்குகளில் 1,497 ஏற்றத்துடனும், 1,578 இறக்கத்துடனும், 93 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): -53.36 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):-1.48 என இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் வந்து போக வாய்ப்பு உள்ளது. 24680 என்ற நிலையைத் தாண்டி, நீண்ட நேரம் அதிக வால்யூமுடன் வர்த்தகம் நடந்தால் மட்டுமே, ஓரளவுக்கு ஏற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது.



நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் ஏற்றம், நண்பகலில் இறக்கம் மற்றும் அதன் பின்னால் ஏற்றம் என்ற அளவில் செயல்பட்ட நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 71 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): -3.81, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 42.15 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): -0.38 என்ற அளவில் இருக்கின்றன. இந்த நிலைமையில் ஏற்றம் வருவதற்கு அவசியம் 54,460 என்ற நிலையை கடக்க வேண்டியிருக்கும். டெக்னிக்கல் சூழல்கள் திடீர் இறக்கம் வந்து போவதற்கு சாதகமாகவே இருக்கிறது.






      Dinamalar
      Follow us