தீபாவளி பணப்பரிவர்த்தனை யு.பி.ஐ., தொடர்ந்து முதலிடம்
தீபாவளி பணப்பரிவர்த்தனை யு.பி.ஐ., தொடர்ந்து முதலிடம்
ADDED : அக் 22, 2025 12:39 AM

புதுடில்லி
தீபாவளி பண்டிகை செலவழிப்பில் இடம்பெற்ற பரிவர்த்தனை முறைகளில், மீண்டும் யு.பி.ஐ., முதலிடம் பெற்றுள்ளது என, என்.பி.சி.ஐ., எனும் 'தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' தரவுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்களில் யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் 30 சதவீதம் அதிகரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகள் 30 சதவீதம் உயர்ந்தாலும், மதிப்பு அடிப்படையில் 2.70 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு யு.பி.ஐ., யை மக்கள் அதிகம் நாடியது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது.
பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டு இரண்டாம் இடம் வகிக்கிறது. பரிவர்த்தனை எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்தாலும், மதிப்பு அடிப்படையில் 2024ம் ஆண்டில் 25.50 சதவீதம் உயர்ந்த நிலையில், தற்போது 22 சதவீத உயர்வே காணப்பட்டது.
டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் பண்டிகை நாட்களிலும் உயர்வை காணாமல், தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளன. பரிவர்த்தனை எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்த நிலையில், மதிப்பும் 9 சதவீத சரிவு கண்டது.