/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (24)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (24)
ADDED : நவ 05, 2024 10:35 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
நிலக்கரி செஸ்: மத்திய மாநில விதிகளில் முரண்பாடு!
ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை எண்ணற்ற திருத்தங்கள், மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இந்த மாறுதல்கள் குறித்து அதிகாரிகளுக்கு போதுமான புரிதல் இல்லை. ஆரம்ப காலத்தில் இருந்த சட்ட விதிகளை மட்டும் பின்பற்று கின்றனர்; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கின்றனர். இத னால், தொழில்முனைவோர் பாதிக் கப்படுகின்றனர். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஏற்றுமதி சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களை மதுரை யிலோ, தூத்துக்குடியிலோ நிறுத்தி வைத்துக் கொண்டு, காலாவதியான விதிகளின் அடிப்படையில், ஆவ ணங்களைக் கேட்கிறார்கள்.
ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு தகவல் தெரிந்து, நாங்களே அதி காரிகளைத் தொடர்பு கொண்டு பேசினாலும், ஒரு நாள் இரண்டு நாள் வாகனத்தை நிறுத்தி வைத்து விடுகின்றனர். அப்படி நிறுத்தி வைத்துவிடுவ தால், குறிப்பிட்ட கப்பலில் சரக்கு கொண்டு செல்ல முடியாமல், விமானம் வாயிலாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, ஏற்றுமதிக்கான பொருட் கள் கொண்டு செல்லும்போது, காலத் தின் அருமை கருதி, பொருட்களை உடனே விடுவித்து, சான்றுகளை மீண்டும் தொடர்புடைய நிறுவனத் திடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண் டுகொள்வதில்லை.
சாயத் தொழிற்சாலைகளுக்கு நிலக் கரி கொள்முதல் செய்யும்போது, மத் திய ஜி.எஸ்.டி., சட்டத்தில், நிலக்க ரிக்கு உண்டான 'செஸ்' திருப்பி வழங்கலாம் என விதி உள்ளது. இதுவே, மாநில ஜி.எஸ்.டி., விதியில் திருப்பி அளிக்கக்கூடாது என முரண் பாடாக உள்ளது.
இதனால், தொழில்முனை வோர் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். பலமுறைசுட்டிக்காட்டியும் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட வில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
-கே.எம். சுப்ரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in