/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (25)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (25)
ADDED : நவ 05, 2024 10:37 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
'சமாதானத் திட்டம்'; இரு தரப்புக்கும் பயன்
எந்தவொரு வளரும் பொருளாதாரத் துக்கும் அடிப்படைக் கட்டமைப்பு களில் மாற்றம் இன்றியமையாதது. அந்தவகையில், 2017ம் ஆண்டு அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., யை, இந்திய பொருளாதார மாற்றத்துக் கான ஒரு முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால் நன் மைகளைப் போலவே நெருக்கடி களும் உண்டு. ஜி.எஸ்.டி., அமல் செய்யப்பட்டது முதல் இதுவரை 900க்கும் அதிகமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டியவை தான். இந்தத் திருத்தங்களின் நோக் கங்கள் நாடு முழுதும் துறைசார்ந்த அதிகாரிகளுக்குச் சென்று சேர்வதில் இருந்த சுணக்கமும், அதைப் புரிந்து கொள்வதில் இருக்கக்கூடிய சிக்கல் களும் தொழில்முனைவோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இதனால், பல தொழில் நிறுவனங் கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., அமல்செய்யப்பட்டதற்கு பிந்தைய 5 ஆண்டுகளுக்கான பல்வேறு நிறுவன கணக்குகளை மத்திய, மாநில ஜி.எஸ். டி., அதிகாரிகள் ஆய்வு செய்து, வரி விதிப்புகளில் தவறு இருப்பதாகக் குறிப்பிட்டு, வரியைப் பெறுவதற் கான கேட்பு மற்றும் அதற்கான வட்டி சேர்த்து பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இது, தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிக்கல்களைக் களைய வேண் டுமெனில், மத்திய அரசு, சமாதானத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த சமாதான திட்டத்தின் வாயிலாக, விதிக் கப்பட்ட தொகையில் இருந்து மிகப் பெரும் தள்ளுபடி மற்றும் வட்டியைத் தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளி யிட்டால், தொழில்நிறுவனங்கள் அந்தத் தொகையைக் கட்டி, தங்களது கணக்கு களை சரி செய்து கொள்வார்கள்.
இல்லாவிட்டால், மேல்முறையீடு செல்வதன் வாயிலாக, அரசுக்கும் பெரும் சுமையாக இருக்கும். இந்தியா முழுதும் இருக்கக்கூடிய மாநில அரசு களில் தேங்கிக் கிடக்கும் வணிகவரித் துறை மேல்முறையீடுகள் மற்றும் நீதி மன்ற வழக்குகளையும் தீர்த்து வைக்க இன்னும் 10 ஆண்டுகள் தேவைப் படும் என்ற சூழலில், ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு வழக்குகளும் சேரு மேயானால், அரசுக்கும் மிகப்பெரும் சுமையாக இருக்கும். சமாதானத்திட் டத்தின் வாயிலாக தொழில்நிறுவனங் களும் சிக்கலில் இருந்து விடுபடும்; அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
- குமார் துரைசாமி கன்வீனர், திருப்பூர் தொழில்வளம் பங்களிப்பு கூட்டமைப்பு
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in