/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை?(26)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை?(26)
ADDED : நவ 05, 2024 10:38 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
மருந்துகளுக்கு வரியைக் குறைக்கலாமே!
மருந்துப் பொருட்களுக்கு 12 சதவீத ஜி.எஸ். டி., விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம். ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலைக்கு உகந்ததல்ல.
குறிப்பிட்ட சில மருந்துகள் மீதான வரி நீக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், மருந் துகள் அனைத்துமே இன்றியமையாதவைதான் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடி யாது. உணவு, உடை, உறைவிடம் இவற் றோடு மருந்துகளும் சாமானிய மக்களின் அத்தி யாவசிய பட்டியலில் உள்ளது.
மருந்துப் பொருட்கள் மீதான வரி என்பது நோயாளிகள் மீதான வரி என்பதே யதார்த்த நிலை. நடுநிலையுடன் ஆராய்ந்தால், மருந்துகள் மீதான வரி எவ்வகையிலும் நியாயமற்றது என் பது தெளிவாகும். மருந்துகளின் மீதான வரியை முற்றிலும் நீக்கினால் மக்கள் நல் வாழ்வில் அது ஒரு மைல் கல்லாக அமையும்.
அவ்வாறு, மருந்துகளின் மீதான வரியை முழு வதும் ரத்து செய்வது சாத்தியம் இல்லை எனில், தற்போதுள்ள 12 சதவீத ஜி.எஸ்.டி., என்பதில் இருந்து, 6 சதவீத ஜி.எஸ்.டி.,யாக குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சிலும், மத்திய, மாநில அரசு களும் ஒருமித்த கருத்துடன் முன்வந்தால், ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர். அதேபோன்று, 'மல்டிவிட்டமின்' போன்ற மருந்துகளுக்கு தற் போது 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனையும் 6 சதவீதமாகக் குறைக்க வேண்டும். ஊட்டச் சத்து பற்றாக்குறையால், விட்டமின், மினரல்கள் அடங்கிய மருந்துகள் அதிகத் தேவை யுள்ளவர்கள் ஏழை எளிய மக்களே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசி யம். மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., குறைப்பு கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் கனிவு டன் பரிசீலிக்க வேண்டும்.
- ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன்
தலைவர், ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம்.
முற்றும்